Posts

Showing posts from July, 2020

பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்;அடுத்த 20நாட்களுக்கு நீங்கள் பார்க்கலாம்!

Image
விஞ்ஞானிகள் சி / 2020 எஃப் 3 நியோவிஸ் (C/2020 F3 NEOWISE) என்ற வால் நட்சத்திரம் மார்ச் மாதத்தில் சூரியனை நெருங்கி வருவதைக் கண்டுபிடித்தனர். இப்போது, அது பூமியிலிருந்து எளிதாக காணப்படும் என்றும், இன்று (ஜூலை 14) தொடங்கி வரும் சில நாட்களுக்கு அதை நாம் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வடமேற்கு பகுதியில் வானத்தில் அந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் காணலாம். "ஜூலை 14 முதல், சி / 2020 எஃப் 3 நியோவிஸ் என்ற வால் நட்சத்திரம் வானத்தில் வடமேற்கு திசையில் தெளிவாகத் தெரியும். அடுத்த 20 நாட்களுக்கு சுமார் 20 நிமிடங்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இது தெரியும். மக்கள் அதை வெறும் கண்களால் பார்க்க முடியும்" என்று புவனேஸ்வரில் உள்ள பதானி சமந்தா பிளேனடேரியத்தின் (Pathani Samanta Planetarium) துணை இயக்குநர் டாக்டர் சுபேந்து பட்நாயக் கூறினார். இந்த வால் நட்சத்திரம் சுமார் 7,000 ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்கு ஒரு சுற்றுப்பாதையை கொண்டுள்ளது. எனவே அது மீண்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அல்லது சூரியனுக்கு அருகில் வரும். எனவே அதனை பார்க்க

தமிழகத்தில் 7,500 கோடி முதலீடு செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம்.6000 பேருக்கு வேலை வாய்ப்புகள்.இனி ஐபோன் விலை இங்கு குறையுமா...?

Image
ஐபோன் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனது கிளையில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா சீனா வர்த்தக போர் கடுமையாக நீடித்து வருகிறது.  இதனால் சீனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.  அதனால் ஒப்பந்த அடிப்படையில் ஐ போன்களை தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தை சீனாவிற்கு வெளியே தயாரிப்பு பணிகளை செய்ய ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.  அதன் அடிப்படையிலேயே பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஸ்ரீபெரும்புதூர் கிளையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.  .  சீனாவில் தயாரான ஆப்பிள் செல்போன்கள் இனி ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும்.  .  சீனா மீது அதிருப்தியில் இருக்கும் நாடுகளை கண்டறிந்து அவற்றை முறையாக அணுகியதன் பலனாகவே தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.

வைரஸ் தொற்று நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் இந்த 5 பழங்கள் கிடைச்ச விட்டுறாதிங்க..!!!

Image
வாழைப்பழங்கள் : வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர், வைட்டமின்கள் ஏ, சி, பி 6, மெக்னீசியம், ஃபோலேட், ரைபோஃப்ளேவின், நியாசின் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு அதிசய பழமாகும், மேலும் வாழைப்பழங்களை தவறாமல் உட்கொள்வது ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. ஆஸ்துமா, புற்றுநோய், நீரிழிவு, இருதய பிரச்சினைகள் போன்ற கொடிய நோய்களைத் தடுக்க வாழைப்பழங்கள் உதவுகின்றன மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. கஸ்டார்ட் ஆப்பிள் : சீதபால் என்றும் அழைக்கப்படும் கஸ்டர்ட் ஆப்பிள், வைட்டமின்கள் ஏ, பி 6 மற்றும் சி ஆகியவற்றால் ஏற்றப்பட்டுள்ளது. இதில் உங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய வைட்டமின் வி மற்றும் 40 சதவீத வைட்டமின் சி ஆகியவை உள்ளன. கஸ்டார்ட் ஆப்பிளை உட்கொள்வது எடை அதிகரிக்க உதவுகிறது மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு, நோயெதிர்ப்பு அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. கஸ்டர்ட் ஆப்பிள் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதன் இரும்புச்சத்து அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. ப

கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகன் காலமானார்!

Image
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி, இன்று பிற்பகலில் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை மன்னன் மகனும், பாரதிதாசன் அறக்கட்டளைத்தலைவருமான கவிஞர் கோ.பாரதி தெரிவித்தார். கோபதி புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, கிட்டத்தட்ட 50 நூல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். புதுவை தமிழ்ச் சங்கத்தில் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பிலிருந்து, அதற்கு சொந்தக் கட்டடமும் கட்டிக்கொடுத்தார். தமிழக அரசின் திருவிக விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞருமான இவர், பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இவர் மனைவி சாவித்ரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு தென்னவம், கவிஞர் பாரதி ஆகிய இரு மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். புதுச்சேரியில் நாளை மாலை 4 மணியளவில் அவரது இல்லத்

"மக்களே உஷார்" கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள் என்னென்ன..??

Image
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் ரஷ்யாவை விஞ்சி இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.5 லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல்  ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது. மேலும் கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் புதிய அறிகுறிகளாக மாறியுள்ளன. எனவே இந்த புதிய அறிகுறிகள் இருப்பது தெரிந்தவனுடன் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம்

புதுமையான திட்டம் தொடங்கியது: சென்னை போலீஸ் கமிஷனர் ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசினார்

Image
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றவுடன் தனது கனவு திட்டத்தை தொடங்கிவிட்டார். அவர் அறிவித்த முதல் திட்டமான பொதுமக்களுடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசி குறைகளை கேட்டறிந்தார். சென்னை, சென்னை போலீசில் இதுவரை இல்லாத வகையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் புதிய திட்டம் தொடங்கி உள்ளார். ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசி குறைகளை கேட்டறிய போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை நேற்று உடனடியாக செயல்படுத்தி விட்டார். வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களிடம் வீடியோ காலில் பேசுவதற்கு அவர் நேரம் ஒதுக்கி உள்ளார். அதன்படி வெள்ளிக் கிழமையான நேற்று பொதுமக்கள் 35 பேர்களிடம் ‘வீடியோ கால்’ வழியாக பேசி குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் சொன்ன குறைகளை அவர் அமைதியாக கேட்டு, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். பொதுமக்கள் சொன்ன குறைகளில் திருட்டு, ‘ஆன்-லைன்’ மோசடி, நில அபகரிப்பு, கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை, காசோலை மோசடி போன்றவை தான் அதிகமாக காணப்பட்டது. சிலர் இ-பாஸ் கேட்டனர். சிலர் ஊரடங்கில் தங்

ஒரே மாதத்திற்குள் 3 வது கிரகணம்: ஜூலை 5 ஆம் தேதி காலையில் நடக்கவிருக்கிறது இதன் பெயர் "இடி சந்திர கிரகணம்"

Image
சென்னை : ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 'இடி சந்திர கிரகணம்' (Thunder Moon Eclipse) நிகழ உள்ளது.ஒரு மாதத்திற்குள் மூன்று கிரகண நிகழ்வு இதுவாகும். சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 5ம் தேதி சந்திர கிரகண நிகழ்வு (ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்) நடந்தது. ஜூலை 5ம் தேதி பெனும்பிரல் சந்திர கிரகணம் *சூரியன் - பூமி - சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகை உண்டு. முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் முழுவதுமாக பூமி மறைக்கக் கூடிய நிகழ்வாகும். பகுதி சந்திர கிரகணத்தின் போது பூமியின் ஒரு பகுதி சந்திரனை மறைக்கக் கூடிய நிகழ்வாகும். பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாகத் தெரிகிறது. வருகிற 5ம் தேதி நிகழ இருக்கும் பெனும்பிரல் கிரகணம், இந்திய நேரப்படி காலை 8.37 முதல் 11.22 வரை நீடிக்கிறது. மொத்தம் 2 மணி நேரம் 45 நிமிடம் நீடிக்கும். 5-ம்தேதி நடைபெற இருக்கும் இந்த சந்தி