ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம்.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின் முழு விவரம்.!
புதிய கடன் வசதியைப் பெற சொத்துப்பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய கடன் வசதியைப் பெற சொத்துப்பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி என பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடியில் என்னென்ன அறிவிப்பு மற்றும் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன.
திட்டங்களின் முழு விவரம்;-
* மின் துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது.
* ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது
* இந்திய பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதே இலக்கு
* நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
* வேளாண்மை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் எரிசக்தியில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளோம்.
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படுகிறது.
* 6.25 கோடி ரேஷன்கார்டு தாரர்கள் உணவு தானியம் பெற்றுள்ளனர்.
* உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது
* பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது
* உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்
* சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன
* சிறு தொழில் நிறுவனங்களுக்கு 9 மற்றும் குறு நிறுவனங்களுக்கு 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* 18,000 கோடி மதிப்பு உணவு,தானியங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* நான்கு ஆண்டு கால தவணை முறையில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டை தன்னிறைவு அடைய செய்துள்ளன
* 41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது
* உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை பொருட்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்
* அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்
* 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது
* 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது
* வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர்
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும்
* ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது
* 15 திட்டங்களில், 6 திட்டங்கள் சிறு குறு தொழில் துறைக்கானது-
* ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது
* அக்டோபர் மாதம் வரை 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்படும்
* கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை
* RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான துணை கடன் வழங்கப்படும்
* சிறப்பு திட்டம் மூலம் 2 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்
* ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்
* சிறப்பாக செயல்படும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.50,000 கோடி கடன் வழங்கப்படும்
* சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
* வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.
* ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.
* ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையினை மத்திய அரசே செலுத்தும்
Comments
Post a Comment