மே 12 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்: ரெயில்வே அறிவிப்பு
முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ரெயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து படிப்படியாகத் தொடக்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நாளை முதல், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு 15 ரெயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில்கள் மீண்டும் மறு மார்கத்தில் இயக்கப்படும் எனவும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து ரெயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படாது . ஆன்லைன் டிக்கெட்டுகள் மூலமாகவே டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் மாஸ்க் அணிந்து கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். டிக்கெட் முன்பதிவு ஐஆர்.சி.டி.சி இணையதளத்தில் நாளை மாலை 4 மணி முதல் துவங்கும்.
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து அசாம், பெங்கல், பீகார், சத்தீஷ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் 15 ரெயில்கள் மட்டும் இயக்கப்படும். பயணிகள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ரெயில்வே பெட்டிகள் இருப்பை பொருத்து கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில்வே பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன” என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment