அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,
அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் உணவகமாக அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Comments
Post a Comment