நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்,மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்- பிரதமர் மோடி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றனர். 

*இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய நேரம்

*உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது

தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது

*y2k பிரச்சினையை எப்படி கடந்து வந்தோமோ அதேபோல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்

*இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்கொண்டிருக்கிறது. 

*உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும்.

* உலகம் என்பது ஒரே குடும்பம் தான் என்பது  இந்தியாவின் நிலை நமக்கு எப்போதும் சுயநலமில்லை.

*யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி  இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.

*தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும். 

*இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது. 

*மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது.

*இந்தியாவின் வளர்ச்சியில்  5 முக்கிய அம்சங்களை கொண்டது.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

*சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.

*எல்லா துறைகளையும் கணக்கில் கொண்டு பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

*உள்ளூர் உற்பத்தி, விற்பனை விநியோகம் இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

* எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் பற்றி நிதியமைச்சர் விரிவாக அறிவிப்பார். 

*இந்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நேரடியாக ஏழைகளின் பைகளுக்கு செல்கிறது. 

* நான்காம் கட்ட ஊரடங்குக் பற்றி மே .18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்

*மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி