கடுகு, தாளிப்பதற்கு மட்டும் தான் என்று நினைக்கிறீங்களா?உண்மையில் அதன் மருத்துவ குணங்கள் இதோ..


கடுகை அரைத்து பின்னர் அதை நீரில் கலந்து விஷம் சாப்பிட்டவர்களுக்கு கொடுத்தால் விஷம் வாந்தியாகி வெளியே வந்து விடும்.கடுகை அரைத்து கீழ் வாதத்தினால் ஏற்படும் வலி உள்ள இடத்தில் தடவி வர வலி தீரும்.




இரண்டு சொட்டு கடுகுஎண்ணெய் மற்றும் சந்தன எண்ணெய் இவை இரண்டையும் கலந்து முகப்பருவில் போட்டு வர முகப்பரு மாறும்.கால் டிஸ்பூன் கடுகு, சிறு துண்டு சுக்கு, 5 கிராம் சாம்பிராணி இவைகளை இடித்து சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு குழைத்து தலை வலி உள்ள இடத்தில் பூச தலைவலி தீரும்.




பாத வெடிப்பில் சிறிதளவு கடுகு எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் கழித்து சுடுநீர் ஒத்தடம் கொடுத்தால் பாத வெடிப்புத் தீரும்.ஐந்து கிராம் கடுகு, கடுக்காய் ஒன்று, கருஞ்சீரகம் 5 கிராம், திப்பிலி இவைகளை இடித்து காலை, மாலை உணவுக்குப்பின் அரை ஸ்பூன் சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்து வர மூலவாயு தீரும்.




ஐந்து துளி அளவு கடுகு எண்ணெய், எருக்கு இலைச்சாறு இவை இரண்டடையும் கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவ வலி தீரும்.கடுகுப் பொடி, மஞ்சள் பொடி இவை இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டு நன்றாக குழைத்து தோல் நோய் உள்ள இடத்தில் மேல் பூசி வர, தோல் நோய் மறையும்.




சிறிதளவு கடுகு, ஒரு துண்டு பெருங்காயம், சிறிதளவு முருங்கைப்பட்டை இந்த மூன்றையும் சேர்த்தரைத்து,பின்னர் இந்த கலவையை கால் மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் தடவி வர வீக்கம் குறையும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்