Posts

Showing posts from February, 2018

ஆண்டாளுடன் கருடன் அமர்ந்தது ஏன் ?

Image
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. முகூர்த்தநேரம் நெருங்கியும் மணமகனான பெருமாள் வரவில்லை. ஆண்டாள் கருடாழ்வாரை உதவிக்கு அழைத்தாள். 'பெருமாளை உடனே அழைத்து வர வேண்டும். இந்த உதவிக்காக பெருமாளின் பக்கத்தில் நான் அமரும் போது உன்னையும் அருகில் இருக்கச் செய்து பெருமைப்படுத்துவேன்,” என்று வாக்களித்தாள். மகிழ்ச்சியுடன் கருடன் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமாளைத் தோளில் தாங்கியபடி வந்து சேர்ந்தார். திருமணமும் குறித்த நேரத்திற்குள் சிறப்பாக நடந்தது. கைகொடுத்த கருடனைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் ஆண்டாள், பெருமாள் இருவருடன் கருடாழ்வார் சேர்ந்து வீற்றிருக்கிறார்.

மருதாணி பூசுவது ஏன் ?

Image
ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்களின் இளந்தென்றல் குறைத்தது.உடனே அந்த மரங்களிடம், ''திருமண நாளில் உன் இலையைப் பெண்கள் கையில் பூசினால், அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது,'' என்ற பெருமையை வழங்கினாள்.

காலில் விழுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல..விஷயம் இருக்கு!

Image
பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, கோயிலில் விழுந்து கும்பிடுவது, யோகிகளைப் பார்த்தால் உடனே பாதத்தை தொட்டு நமஸ்கரிப்பது போன்ற வழக்கங்கள் கலாங்கலமாக இருந்து வருகின்றது. அறிவியல் ரீதியாக இதில் ஏதாவது அடிப்படை உள்ளதா?  காலைத் தொட்டு வணங்குவது நம்முடைய கலாசாரமாக மட்டுமல்ல, இதில் அறிவியல் ரீதியான சில காரணங்களும் உண்டு. கலாசாரம் என்று பார்த்தால் மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்.  பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூல காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பாதத்தை தொட்டு வணங்குகிறோம்.  அறிவியல் ரீதியாக உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று உறுப்புகளாகப் பார்க்கலாம். உடல் என்பது நம்மை ஆட்டுவிக்கும் ஒரு சக்தி. இந்தச் சக்திதான் நம்மை  எல்லாவிதத்திலும் செயல்பட வைக்கிறது.  நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் க

சிவனுக்கு நெற்றிக்கண் ஏன் ?

Image
சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என புராணங்கள் சொல்கின்றன. நெற்றிக்கண் என்பது அழிவு சக்தி அல்ல. அது ஞானத்தின் அடையாளம். இந்த ஞானக்கண்ணை லேசாக திறந்து, பெண்ணாசையைத் துாண்டும் காதல் தேவனான மன்மதனை அவர் அழித்தார். இதனால் தான் தியானம் செய்யும் போது, புருவ மத்தியில் (நெற்றியின் அடிப்பகுதி) நமது கருத்துக்களை ஒன்று சேர்க்கிறோம். அப்போது மனம் அடங்குகிறது. ஆசை குறைகிறது. எதைச் சேர்த்து வைத்தாலும் அதனால் பயனில்லை என்ற ஞானம் பிறக்கிறது. நெற்றிக்கண் என்பது ஆசையை அடக்கும் கருவியாகும். 

பஞ்சாங்கம் என்றால் என்ன ?

Image
நம்முடைய கலாசாரம், பண்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம், விரதங்கள், விசேஷங்கள், வழிபாடுகள், உற்சவங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய ஓர் வழிகாட்டி புத்தகமே பஞ்சாங்கம். இவற்றில் ஐந்து விஷயங்கள் மிக முக்கியமானவை. பஞ்ச என்றால் ஐந்து. இந்த ஐந்து விஷயங்களை மையமாக வைத்து அன்றைய தினத்தை பற்றி தெரிந்துகொள்வதுதான் பஞ்சாங்கம். (1) வாரம்: ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளை அறிவது. (2) திதி: சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பது. வளர்பிறை 15 திதி, தேய்பிறை 15 திதி மொத்தம் 30 திதிகள். (3) நட்சத்திரம்: குறிப்பிட்ட தினம் எந்த நட்சத்திரத்தின் ஆளுமையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது. அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27. (4) யோகம்: குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரம். விஷ்கம்பம் தொடங்கி வைதிருதி வரை மொத்தம் 27 யோகங்கள். (5) கரணம்: திதியில் பாதி தூரம் கரணம் எனப்படும். பவம் தொடங்கி கிம்ஸ்தக்னம் வரை மொத்தம் 11 கரணங்கள். நட்சத்திர பலன் : பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை பூராடம், பூரட்டாதி ஆகிய 12 ந

இரவில் தயிர்சாதம் சாப்பிடலாமா ?

Image
நீதி சாஸ்திரம் என்னும் நூல், மனிதன் கடைபிடிக்க வேண்டியதும், வேண்டாததுமான ஐந்து விஷயங்களைப் பட்டியல் இடுகிறது.  காலை வெயிலில் காய்தல், பிணப் புகையை சுவாசித்தல், வயதில் மூத்தவளைத் திருமணம் செய்தல், தேங்கிய நீரைக் குடித்தல், இரவில் தயிர்ச்சாதம் சாப்பிடுதல் ஆகிய செயல்களால் உடல்நலக்குறைவு உண்டாகும். எனவே இதைத் தவிர்ப்பது நன்மையளிக்கும்.  மாலை வெயிலில் காய்தல், வேள்விப் புகையை சுவாசித்தல், வயதில் இளையவளை மணத்தல், தெளிந்த ஓடை நீரைக் குடித்தல், இரவில் பால் சாதம் சாப்பிடுதல் ஆகிய ஐந்தையும் கடைபிடித்தால் நீண்ட ஆயுள், உடல்நலம் உண்டாகும்.

ஆண்கள் மட்டுமே தரிசிக்கும் அம்மன்

Image
அம்மன் என்றாலே பெண்களுக்குரிய தெய்வம் என்று உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ., தூரத்திலுள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். விநாயகருக்கு மட்டும் சன்னிதி உண்டு. இக்கோவிலுக்குள் பிறந்த பெண் குழந்தையைக் கூட அனுமதிப்பது கிடையாது. ஆனால் வெளியே நின்றபடி வழிபடத் தடையில்லை. இந்த அம்மனை இவ்வூர் ஆண்கள் ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளையில் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக இக்கோவில் செவ்வாய்க்கிழமை மட்டும் திறக்கப்பட்டு நள்ளிரவில் ஆண்களால் மட்டுமே பூஜை நடத்தப்படுகிறது.

பெண்ணின் பெயரில் பெருமாள்

Image
பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாற, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இந்த வடிவத்துடன் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயாலி என்ற இடத்தில் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். 'ரயாலி' என்றால் 'விழுதல்'. மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் காட்சி தந்தபோது அவர் தலையில் சூடியிருந்த மலர் இங்கு விழுந்ததால் இவ்வூருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் விரல் நகம், ரேகைகள் துல்லியமாகத் தெரியும்படி சிலை நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறம் பெண்ணின் சாயல் உள்ளது.  கால்களில் தண்டை, சிலம்பு அணிந்து வட்டமாக கொண்டை முடிந்து, மலர் சூடி காட்சி தருகிறார். முன்புறத்தோற்றம் ஆணைப் போல் உள்ளது. ஆண் வடிவத்தை 'ஜெகன்' (உலகை ஆள்பவர்) என்றும், பெண் வடிவத்தை 'மோகினி' (பக்தர்களைக் கவர்பவள்) என்றும் சொல்கிறார்கள். இரண்டையும் இணைத்து சுவாமிக்கு 'ஜெகன்மோகினி கேசவப்பெருமாள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, நாரதர், ஆதிசேஷன், கருடாழ்வார், கங்கை, தும்புரு, ரம்பை, ஊர்வசி ஆகியோரின் சிற்பங்கள் சிலையைச் சுற்றி உள்ளன. சுவாமியின் பாதத்தில் த

மகாசிவராத்திரி மகத்துவம் என்ன ?

Image
ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மகாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இதற்கு ஈஷா யோகா மைய சத்குரு விளக்கம்:- மகாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மகாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், ம