கேட்டதைக் கொடுக்கும் தமிழ்க் கடவுள் முருகன் மந்திரம்!








    









முருகன் வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்வியலில் தொன்றுதொட்டே பக்தி வழக்காமாக இருந்து வருகிறது. தமிழில் முருகு என்றால் அழகு, இளமை, வீரம் என பலப்பொருள் உண்டு. அதனாலே முருகன் அழகு கடவுளாகவும், இளமையானவராகவும், வீரத்தின் அதிபதியாகவும் திகழ்கிறார். பழனி, மருதமலை, சுவாமிமலை, திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் என அறுபடை வீடுகளுக்கும், கந்தன், கடம்பன், கதிர்வேலன், வேலன், சரவணன், சுப்ரமணியன், சுவாமிநாதன், தகப்பன் சாமி, குமரன் என பலநூறு பெயர்களுக்கும் அதிபதியாகி நிற்கிறான் முருகன்.

தைப்பூசம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் என பல விசேட நாட்களுக்குச் சொந்தக்கரானாகிய முருகனிடம் யார் எதை வேண்டினாலும் வேண்டிய வரத்தை பெறலாம். புத்திர யோகம், வாகன யோகம், மனை யோகம், உத்தியோக யோகம் என எல்லா யோகங்களையும் கொடுப்பவன் அவனே.

ஓம் என்னும் தத்துவனாகிய அவனை வணங்கும்போது இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இந்த எளிய மந்திரத்தை கூறி அவனை பூஜிப்பதால், நீங்கள் கேட்ட வரத்தை மனமகிழ்ந்து வழங்கிடுவான்.

“ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ”



இவ்வளவுதான் மந்திரம். ஒரு வரி மந்திரம்தான். ஆனால் அதன் வீரியம் பெரிது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலை தலைக்கு குளித்துவிட்டு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள், பூஜையறையில் முருகனின் முன் இரண்டு நே தீபங்கள் ஏற்றி வைத்து பின்இந்த மந்திரத்தை 1௦8 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாயும் இந்த மந்திரத்தை பிரயோகித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் பல உயர்வுகளை காண்பீர்கள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்