உங்களுக்குக் கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க

கோபம் உங்களை உடன் இருந்தே கொல்லும் வியாதி. நெருப்பு உருவான இடத்தை அழித்து விட்டுத் தான் மற்ற இடங்களுக்கு அது பரவும். அது போலத் தான் கோபம் என்னும் கொடிய குணமும். அது உங்களை அழித்து விட்டுத் தான் பிறரிடம் வேலையை காட்டும். ‘கோபப்படுவது’ அல்லது ‘நான் ரொம்பக் கோபக்காரங்க!’ என்று சொல்லிக் கொள்வது உண்மையில் ஒரு பெருமையான விஷயமே அல்ல. நீங்கள் கோபப் பட்டால் என்னாகும்? உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றிக் கூறும் பதிவு தான் இது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கோபத்தை அடக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப் போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும் ஆனால் அந்தக் கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை இத்தகைய பிரச்சனைகள். இது தவிர, கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை பட்டியலிட்டுள்ளோம் அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி நீங்களே முடிவெடுங்கள்!

கோபத்தால் வரும் பிரச்சனைகள்

மன அழுத்தம்

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதயத் துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாகக் கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு

சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, அது தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கியக் காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும் எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

அது மட்டும் அல்ல, கோபம் சில சமயங்களில் பக்க வாதத்தை கூட ஏற்படுத்தி விடுகிறது.

மேற்கண்ட காரணங்களை படித்தீர்கள் அல்லவா? இதனை மனதில் கொண்டு இனி வரும் காலங்களிலாவது கோபத்தை குறைப்போம். நீங்கள் கோபப் படாமல் அடுத்தவர்களை மன்னித்தீர்கள் என்றால் அதனால் வரும் பயன் உங்களுக்குத் தான் (அடுத்தவருக்கு இல்லை). அதனால் கோபத்தை குறைப்போம். மன்னிக்கப் பழகுவோம்.

வாழ்க வளமுடன்!



Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்