நீங்கள் பிறந்த கிழமை என்னவென்று சொல்லுங்கள். நீங்கள் யாரென சொல்கிறோம்!

பொதுவாக ஜோதிட மற்றும் வானவியல் ஆராய்ச்சியில் பிறந்தநேரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் பிறந்த நேரம் எவ்வளவு முக்கியமோ அதைவிட பிறந்த கிழமை நம் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மையைப் பெற்றது. மேலும் பிறந்த தேதி அதாவது "எண் " என்பது எந்த அளவு நம் வாழ்வை பாதிக்கும் அதே அளவிற்கு "கிழமையும் " நம் வாழ்வை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.
வானவியல் விஞ்ஞானத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கும் உரியதாகும்.

சூரியனின் ஆதிக்கம் ஞாயிற்றுக்கிழமையிலும், சந்திரனின் ஆதிக்கம் திங்கட்கிழமையிலும், செவ்வாயின் ஆதிக்கம் செவ்வாய்க் கிழமையிலும், புதன் கிரகத்தின் ஆதிக்கம் புதன் கிழமையிலும் குருவின் ஆதிக்கம் வியாழக்கிழமையிலும் சுக்கிரனின் ஆதிக்கம் வெள்ளிக்கிழமையிலும் சனி பகவானின் ஆதிக்கம் சனிக்கிழமையிலும் காணப்படும்.

திங்கட்கிழமை.

திங்கட் கிழமை பிறந்தவர்கள் அன்பான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களைத் தாங்களே உற்சாகப் படுத்திக் கொள்வார்கள் ஆரம்ப நாட்களில் பள்ளிப்படிப்பை வெறுக்கும் இவர்கள் பின்னாட்களில் கல்வியில் நல்ல புலமை பெற்று வருவார்கள் .


செவ்வாய் கிழமை

செவ்வாய்க் கிழமை பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள் முன் கோபியாக இருப்பார்கள். அதனால் உறவுகளுக்கும் அவர்களுக்கு எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

புதன் கிழமை

புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் புதன் கிழமையில் பிறந்தவர்கள் மதம் சார்ந்த மற்றும் ஆன்மீக நாட்டம் உடையவர்களாகவும் இதன் முழு மூச்சுடன் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள். இறைவனுக்கு பயந்த அவர்களின் குணம் அவர்களை தவறான வழியில் இருந்து எப்போதும் காப்பாற்றும். அன்பானவர்கள் ஆகவும் அமைதியானவர்கள் ஆகவும் பெற்றோரை மதிப்பவர்களகவும் இருப்பர். இவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது.

வியாழகிழமை

குருவின் ஆதிக்கம் பெற்ற வியாழக் கிழமை பிறந்தவர்கள் அறிவுள்ளவர்களாகவும் ம் துணிவுள்ள மனப்பான்மை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். அதிர்ஷ்டம் வாய்த்தவர்களாகவும், நண்பர் மற்றும் உடன் இருப்பவர்களிடமிருந்து பெரும் அன்பையும் ஆதரவையும் பெற கூடியவர்களாகவும் இருப்பர்.

வெள்ளிகிழமை

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் தனித்தன்மை பெற்றாவர்களாக, உற்சாக மனப்பான்ன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். தன்னை சுற்றி இருப்பவர்கள் இடத்தில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த நாளில் ஆட்சி செய்யும் கிரகம் சுக்கிரன் என்பதால் அளவற்ற பொறுமையோடு சோதனை காலங்களைக் கடந்து வருவார்கள்.

சனிக்கிழமை

சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் பெற்றோருடனும் சகோதரர் வழியில் மனஸ்தாபம் நடக்கும் சிறு வயதில் சிரமப்பட்டாலும் வாழ்வின் பிற்பகுதி மகிழ்ச்சியாக இருக்கும்.

ஞாயிற்றுகிழமை

ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்கள் கல்வியிலும் கலையிலும் புகழ் பெறக் கூடியவர்களாக இருப்பார்கள் தன் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்