சளி, இருமலுக்கு ஒரே நாளில் பலன் தரும் ’கதா பானம்’... வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.


கதா ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும், இது பெரும்பாலும் தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

2 கப் - தண்ணீர்
1 துண்டு - தோல்நீக்கிய இஞ்சி,
5 - கிராம்பு,
6 - கருப்பு மிளகு,
6 - துளசி இலைகள்,
½ தேக்கரண்டி - தேன்
2 அங்குல இலவங்கப்பட்டை

தேவையான பொருட்கள் :

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை நன்கு நசுக்கு சேர்க்கவும். பின்னர் துளசி இலைகளை சேர்க்கவும். மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வத்தியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்துங்கள்.

கதா பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

கதா பானம் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான மூலமாகும். இதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் பருவகால நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

சளி பிரச்சனைக்கு தீர்வளிக்க…

இஞ்சி மற்றும் மிளகு தொண்டைக்கு இதமளிக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பானத்தை தினமும் அருந்தி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

இருமலை சரிசெய்ய…

கதா பானத்தை தேன் சேர்த்து அருந்தி வந்தால் நாள்பட்ட இருமல் கூட சரியாகும். குறிப்பாக வறட்டு இருமல் பிரச்சனை காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த பானம் வரப்பிரசாதம் என்றே கூறலாம்

சளி பிரச்சனைக்கு தீர்வளிக்க…

இஞ்சி மற்றும் மிளகு தொண்டைக்கு இதமளிக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பானத்தை தினமும் அருந்தி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

இருமலை சரிசெய்ய…

கதா பானத்தை தேன் சேர்த்து அருந்தி வந்தால் நாள்பட்ட இருமல் கூட சரியாகும். குறிப்பாக வறட்டு இருமல் பிரச்சனை காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த பானம் வரப்பிரசாதம் என்றே கூறலாம்

மூட்டு பிரச்னைக்கு..

இந்த கதா பானத்தில் மஞ்சள் தூள் சேர்த்து அருந்துவதால், குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

குறிப்பு : அனைத்து மசாலாப் பொருட்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே சேர்க்கவேண்டும், ஏனெனில் அதிகப்படியாக சேர்த்து கொண்டால் உணவு குழாயில் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்