காது குடையலாமா? – எதை வைத்து சுத்தம் செய்யலாம்??


காதுகளைக் குடையலாமா என்று கேட்டால் மருத்ஹுவர்களின் ஒற்றை பதில் நோ.... காதுகளை எப்போதுமே குடையக் கூடாது.  காதுகள் ஒருவருக்கு  சரியாக கேட்க வேண்டும் என்றால் காதுகளின் உள்ளே இருக்கும் செவிப்பறை ( Ear drum) சுத்தமாகவும் சேதமடையாமலும் இருக்க வேண்டும். இதற்காக  இயற்கை வேக்ஸ் என்ற பாதுகாப்பான ஒரு விஷயத்தைக் கொடுத்துள்ளது.  

நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.

 காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து  செவிப்பறைக்கு சேதம் ஏற்ப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த செருமென் 24மணி நேரமும் தனது பணியைச் செய்து வருகிறது. 

எந்த பூச்சி உள்ளே போனாலும் அதற்கு ஆயுள் சில விநாடிகள்தான்.

எனவே இந்த வேக்சை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. புதிதாய் வேக்ஸ் உருவான பின் பழையது தானாகவே  மெல்ல மெல்ல வெளியே வந்துவிடும். இதனை  'ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்' என்று சொல்கிறார்கள்.  

ஆனால் சிலர் இதனை நீக்க  இயர் பட்ஸை உபயோகிப்பார்கள். இப்படி அகற்றும் போது பெரிய ஆபத்துகள் இரண்டு உள்ளன.

 ஒன்று, இயர் பட்ஸ் பஞ்சில் பூஞ்சை காளான்கள் போன்ற கிருமிகள் இருக்கலாம். அவை செவிப்பறையில் நோய் தொற்றை உண்டாக்கலாம்.  நோய் தொற்றை சரி செய்யாவிட்டால் செவிப்பறையில் கிழிசல் ஏற்பட்டு காதுகேளாத நிலை உண்டாகும்.

இரண்டாவது, இயர் பட்ஸை காதுக்குள் நுழைத்து வேக்ஸ்ஐ வெளியே எடுக்க முயற்சிக்கும் போது சில நேரங்களில் அந்த வேக்ஸ்  உள்ளே போய் செவிப்பறையில் அழுத்தமாக ஒட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் செவிப்பறையை வீங்க வைக்கும். அதுவும் காதுக்கு  பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.  ஆகவே, காதைக் குடையாமல் இருப்போம்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்