Posts

Showing posts from December, 2023

சளி, இருமலுக்கு ஒரே நாளில் பலன் தரும் ’கதா பானம்’... வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...

Image
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். கதா ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும், இது பெரும்பாலும் தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : 2 கப் - தண்ணீர் 1 துண்டு - தோல்நீக்கிய இஞ்சி, 5 - கிராம்பு, 6 - கருப்பு மிளகு, 6 - துளசி இலைகள், ½ தேக்கரண்டி - தேன் 2 அங்குல இலவங்கப்பட்டை தேவையான பொருட்கள் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை நன்கு நசுக்கு சேர்க்கவும். பின்னர் துளசி இலைகளை சேர்க்கவும். மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வத்தியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்துங்கள். கதா பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள...

காது குடையலாமா? – எதை வைத்து சுத்தம் செய்யலாம்??

Image
காதுகளைக் குடையலாமா என்று கேட்டால் மருத்ஹுவர்களின் ஒற்றை பதில் நோ.... காதுகளை எப்போதுமே குடையக் கூடாது.  காதுகள் ஒருவருக்கு  சரியாக கேட்க வேண்டும் என்றால் காதுகளின் உள்ளே இருக்கும் செவிப்பறை ( Ear drum) சுத்தமாகவும் சேதமடையாமலும் இருக்க வேண்டும். இதற்காக  இயற்கை வேக்ஸ் என்ற பாதுகாப்பான ஒரு விஷயத்தைக் கொடுத்துள்ளது .   நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.  காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து  செவிப்பறைக்கு சேதம் ஏற்ப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த செருமென் 24மணி நேரமும் தனது பணியைச் செய்து வருகிறது.  எந்த பூச்சி உள்ளே போனாலும் அதற்கு ஆயுள் சில விநாடிகள்தான். எனவே இந்த வேக்சை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. புதிதாய் வேக்ஸ் உருவான பின் பழையது தானாகவே  மெல்ல மெல்ல வெளியே வந்துவிடும். இதனை  'ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்' என்று சொல்க...