கோடையில் சாப்பிட மற்றும் சாப்பிட கூடாத உணவுகளை பற்றித் தெரியுமா???


கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க சில உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அதே போல், சில உணவு வகைகளை சாப்பிட கூடாது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.



சாப்பிட வேண்டிய உணவுகள் : 

கோடை காலத்தில் தண்ணீர்அதிகமாகக் குடிக்க வேண்டும். மண்பானை குடிநீர் மிகவும் நல்லது.

இளநீர் அதிகமாக பருக வேண்டும். நுங்கு சாப்பிடலாம். 



பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். பழச்சாறும் அருந்தலாம். வெள்ளரி, தர்பூசணி ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

வாரத்தில் இரு முறை எண்ணெய்தேய்த்துக் குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் சூடு குறையும். 



வெயிலிலிருந்து வந்ததும் தாகத்தைக் குறைக்க தண்ணீருடன் குளுக்கோஸ், எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து குடிக்க தாகம் தணிவதோடு உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும்.

சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கம்பு கேழ்வரகு போன்றவற்றைக் கூழ் செய்தும் சாப்பிடலாம்.

தினமும் இருமுறை குளிக்க வேண்டும்.

சாப்பிடக் கூடாத உணவுகள் :         

கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.



 அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக சிக்கன் சாப்பிடக் கூடாது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

மாம்பழம் சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

செயற்கை குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி