உங்கள் குழந்தையை தூங்க வைக்க கஷ்டமா இருக்குதா?




குழந்தைகளை தூங்க வைப்பதே பெரும் கஷ்டமா இருக்குதா உங்களுக்கு தூக்கம் வந்தாலும் உங்க குழந்தைக்கு தூக்கம் வரமாட்டேங்குதா குழந்தையை தூங்க வைக்கிறதுக்கு சில டிப்ஸ் இருக்குது தெரிஞ்சிப்போமா. 

எப்பவுமே குழந்தைக்கு தூக்கம் வந்தா சில அறிகுறி மூலமா தெரிஞ்சிக்கலாம். குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனிக்க வேண்டும் அந்த நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. அப்படி விளையாட்டு காட்டினாள் குழந்தை தூங்காமல் சுறுசுறுப்பாக விளையாட தொடக்கி விடும் இதனால் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும்.



குழந்தைக்கு தூக்கம் வருவதற்கான அறிகுறியாக  மூக்கு மற்றும் கண்களை கைகளால் தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும் சில குழந்தைகள் தூக்கம் வருவதை அழுகை மூலமாக கூட உணர்த்தும். இந்த மாதிரி நேரத்தில் தொட்டிலிலோ அல்லது மெத்தையிலோ படுக்க வைத்து மெதுவாக தட்டி கொடுத்தால் போதும் தூங்கிவிடும்.



குழந்தைகள் தூக்குவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பே விளையாட்டு காட்டுவதை நிறுத்த வேண்டும் சில குழந்தைகள் பால் குடித்தால் நன்கு தூங்கி விடும் சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். புட்டிபால் கொடுப்பவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம் அல்லது வெளிச்சம் குறைவாக உள்ள லைட்டை ரூமில் பயன்படுத்தலாம். குழந்தைகள் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது ஒரே இடத்தில தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்