சைவ சமய இலக்கியங்கள் இத்தனை சிறப்பு வாய்ந்ததா

சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன.




இந்த இலக்கியங்கள் சைவத்தினைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழின் மைல் கற்களாகவும் அமைந்தன. இவற்றில் சில இலக்கியங்கள் சைவத்தின் நுண்ணிய கருத்தினையும், சித்தாந்த நெறிகளையும் வெளிப்படுத்தின. 




சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர்.




இப் பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது. 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்