Posts

Showing posts from September, 2018

விநாயகரும் ஜென்ம நட்சத்திர வழிபாடும்

Image
அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:- அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம். பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம். கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம். ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம். மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம். திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம். புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம். பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம். ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும். மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும். பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும். உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும். ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்

பரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்

Image
பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். மக்களுக்கு இக்காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளை காட்டிலும், ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதற்கு மனிதன் தன் பணவலிமை, மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து, அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறான். அது பலனளிக்காமல் போகும்போது தெய்வத்தின் அருளை நாடுகிறான். அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது. மக்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஹோமம், கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவது ஒரு சாந்தி ஒருவர் செய்து, அதனால் ஒருவருக்கு பிரச்சனை தீர்ந்து, நன்மை ஏற்படுகிறது. மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனை வரும் சமயத்தில் அதே சாந்தி, வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள். இது தவறு, இது போன்று செய்யக்கூடாது. ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும். ஆகவே தலைவலி எ

பிரதோஷ விரதத்தை யாரெல்லாம் கடைபிடிக்கக வேண்டும்

Image
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது. தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது. மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் ஏதாவது ரகசியத்தைச் சொல்வார்கள். சைவத்தைப் பொறுத்தவரையில் பி

விநாயகரின் சில பெயர்கள்

Image
கணபதி - பூத கணங்களுக்கு தலைவன் விக்னேஸ்வரன் - தடை அனைத்தையும் போக்குபவர் லம்போதரன் - தொந்தி உடையவர் ஐங்கரன் - ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர் வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை பெற்றவர் பிள்ளையார் - குழந்தைபோல் வெள்ளை மனம் கொண்டவர் ஒற்றைக்கொம்பன் - ஒரு கொம்பு உடையவர் ஹேரம்பர் - திக்கற்றவர்களுக்கு உதவுபவர் விநாயகர் - தெய்வங்களுக்கெல்லாம் மேலான தலைவர் தந்திமுகன் - தந்தத்தை பெற்றவர்

விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

Image
விநாயகர் சதுர்த்தியன்று எந்த காரணத்தை கொண்டும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அரிசி மாவினால் செய்த இனிப்பை கொண்ட கொழுக்கட்டை விநாயகருக்கு ரொம்ப பிடிக்கும். அதாவது பிறந்தநாளின் போது அவர் வீடு, வீடாக சென்று கொழுக்கட்டைகளை பெற்று கொண்டு இருந்தார்.  அதிகமாக இவற்றை சாப்பிட்டு விட்டு இரவில் அவர் எலியின் மீது அமர்ந்து பவனி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பாம்பை பார்த்து எலி பயந்து விட்டது. அதனால் விநாயகர் கீழே விழுந்து விட்டார். அவரது வயிறு கிழிந்து கொழுக்கட்டைகள் வெளியே வந்தன. அவற்றை மீண்டும் விநாயகர் தன் வயிற்றுக்குள் திணித்தார். அந்த பாம்பை தன் வயிற்றை சுற்றி கட்டிக்கொண்டார். ஆகாயத்தில் இருந்து இதை பார்த்து கொண்டு இருந்த சந்திரன் கல கல என்று சிரித்து விட்டார். இதை பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதை சந்திரனை நோக்கி எறிந்தார். விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார். அப்படி அவர்கள் பார்த்தால் அவர்கள் இகழ்ச்சியையும், பாவத்தையும் அடைவர். தவறாக எவராவது பார்த்து விட்டால் அதற்கு பிராயச்சித

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

Image
முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார். அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார். பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சமய சின்னங்களும் அதன் உண்மையான அர்த்தங்களும் உங்களுக்கு தெரியுமா?

Image
உலகில் பல்வேறு சமயங்கள் உள்ளது. மக்கள் அவர்களின் விருப்பமான தெய்வத்தை வணங்கி தங்கள் வாழ்க்கையை அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சமயமும் பல்வேறு சின்னங்களை கொண்டு உள்ளது. அந்த சின்னங்களை புனிதமாக கருதி வழிபட்டு வருகின்றனர். பல்வேறு சமய சின்னங்களும் அதன் உண்மையான அர்த்தங்களும் என்னவென்று பார்க்கலாம் வாங்க.. ஸ்வஸ்திகா எனப்படும் இந்த சின்னம் இந்துக்களின் புனித சின்னம். இது அமைதியும் வளமையும் குறிப்பதாகும். ஸ்வஸ்திகா சின்னத்தை வீட்டு வாசல் கதவுகளில் வரைந்து வைத்து இருப்பார்கள். இது லக்ஷ்மி தேவியை வரவேற்பதாக அமைகிறது. திரிசூலம் இது இந்து கடவுள் சிவபெருமானை குறிக்கிறது. அளிக்கும் கடவுளான சிவனை குறிக்கும் இந்த திரிசூலம் ஆற்றலை குறிப்பதாகும். சிலுவை கிறிஸ்தவர்களின் புனித சின்னமாகும். இயேசு மனிதராக பிறந்து மக்களின் பாவங்களை தன் இரத்தத்தால் கழுவிய புனிதத்தை குறிப்பது இந்த சிலுவை ஆகும். பிறை மற்றும் நக்க்ஷத்திரம் இஸ்லாமியர்களின் புனித சின்னமாகும். உருவமற்ற அருவமாக கடவுளை வழிபடுபவர்கள். இஸ்லாமியர்களின் பொதுவான சின்னமாக உள்ளது. ஓம் என்பது அண்ட சரச்சாரத்தை குறிக்கும்

சைவ சமய இலக்கியங்கள் இத்தனை சிறப்பு வாய்ந்ததா

Image
சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவத்தினைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழின் மைல் கற்களாகவும் அமைந்தன. இவற்றில் சில இலக்கியங்கள் சைவத்தின் நுண்ணிய கருத்தினையும், சித்தாந்த நெறிகளையும் வெளிப்படுத்தின.  சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர். இப் பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது.