தயிரை பயன்படுத்திக் அழகை பராமரிப்பு முறை பற்றி தெரியுமா?

எல்லோருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருக்கும். ஆனால் அதற்காக அதிக அளவில் பணம் செலவளிக்கவும் அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த வகையில் எளிதாகவும், மிக குறைவான செலவில் கிடைக்க கூடியதுமான தயிரை பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

தயிரை பயன்படுத்தி அழகை பராமரிக்கும் முறை:-
உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும்.
தயிரை முகம் மற்றும் உடம்பில் தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும். மேலும் சருமம் மென்மையாகும்.
டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகப்பருக்கள் மறையும்.
தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை வாரம் இருமுறை செய்தாலே போதுமானது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?