தினமும் இந்த வகையான பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் சாப்பிடக் கூடிய உணவு பொருள்கள் தான் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-
தினமும் இரண்டு நெல்லிக்காயை சாப்பிட்டால் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் – சி மற்றும் இதர சத்துகள் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பெரும்பாலும் இதை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.
மாதுளை பழத்தினை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். மாரடைப்பு, நெஞ்செரிச்சல், இரத்த கொதிப்பு, அல்சர், அஜீரணம் போன்றவற்றை குணப்படுத்த கூடிய தன்மை இதற்கு உண்டு.
திராட்சை பழத்தை சாப்பிட்டால் உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். குரல் வளம் இனிமையாகும். மலச்சிக்கல் தீரும். உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் திராட்சை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குடல் னோய், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண்ணை சரி செய்யும் ஆற்றலை கொண்டது.
இரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் மேலும் இரத்தம் சுத்தமாகும்.
சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துகள் கிடைக்கின்றன. பெண்களின் கர்ப்பபையில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகள் கூட இதை சாப்பிடலாம்.
 
 
Comments
Post a Comment