Posts

Showing posts from December, 2020

ஜனவரி 1முதல் அரசு விதிகளின் இத்தனை மாற்றங்களா?பொதுமக்களே வருகிற ஆண்டு செலவு மிகுந்த ஆண்டாக இருக்கும்...

Image
ஜனவரி 1, 2021 முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. நேர்மறை ஊதிய முறை': செப்டம்பர் மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) காசோலைகளுக்கு 'நேர்மறை ஊதிய முறை' அறிவித்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) 2021 ஜனவரி 1 முதல் இந்த முறையை அறிவித்துள்ளது. இதன் கீழ், ரூ .50,000 க்கும் அதிகமான காசோலை பரிவர்த்தனைகளுக்கு முக்கிய விவரங்களை மறு உறுதிப்படுத்தல் தேவைப்படும். காசோலை வழங்குபவர் தேதி, பயனாளியின் பெயர், பணம் செலுத்துபவர், தொகை போன்ற விவரங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மின்னணு முறையில், எஸ்எம்எஸ், மொபைல் வங்கி, இணைய வங்கி, ஏடிஎம் போன்றவற்றிக்கும் பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்: எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. விலைகளை அதிகரிக்கலாம், மாறாமல் வைக்கலாம் அல்லது குறைக்கலாம். சரல் ஜீவன் பிமா பாலிசி: காப்பீட்டு நிறுவனங்கள் சரல் ஜீவன் பீமா பாலிசியை அறிமுகப்படுத்தும், இது ஒரு நபர் குறைந்த பிரீமியம் தொகையில் கூட ஒரு

உங்கள் ரேஷன் கார்டில் இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?" நீங்களே பாருங்கள்

Image
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன. PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana): இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும்.இவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். NPHH ( Non Priority House Hold) - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்து

சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமுள்ளது என்று எப்படி கண்டறிவது...? எளிய வழி இதுதான்...

Image
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால், ஒரு சிலிண்டர் பல மாதங்களாக பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பயன்படுத்தப்படும் சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம். பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து, சிலிண்டரில் இவ்வளவு கேஸ் இருக்கும் என்று யூகிக்கிறார்கள், ஆனால் இந்த முறை முற்றிலும் தவறானது. அப்போ சரியான வழியை அறிந்து கொள்ளுங்கள் .. நீங்கள் வீட்டில் ஒரு புதிய சிலிண்டரை பொருத்தும் போது, ​​அது முதலில் நன்றாக வேலை செய்கிறது. அடுப்பில் வெப்பம் வரத் தொடங்கும். பின்னர் ​​சிலிண்டரை மாற்றுவதற்கான நேரம் இது என்று நீங்கள் யூகிக்கிறீர்கள். சிலிண்டரின் எடையின் படி, அதில் எவ்வளவு வாயு இருக்கும் என்று நீங்கள் கணக்கிட்டு கொள்கிறீர்கள். ஆனால் இந்த வழியில் நீங்கள் எவ்வளவு வீணடிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிலிண்டரில் எரிவாயுவை அளவிடும் இந்த முறை முற்றிலும் தவறானது. இந்த வழியில் சிலிண்டரில் வாயுவை

காலையில் எழுந்தவுடன் படுக்கை தலையணையை எடுக்க சொல்வது ஏன்?

Image
நாம் வீட்டில் இரவு உறங்கிவிட்டு காலை எழுந்ததும், நாம் படுத்திருந்த பாய் மற்றும் தலையணை, போர்வை போன்றவற்றை மடித்து ஓரமாக வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அல்லது நமது பாட்டி / தாத்தா போன்றோர் கூறியதை நாம் கேட்டிருப்போம். எதற்காக அவர்கள் இதனை கூறுகிறார்கள் என்று இனி அறிந்துகொள்ளலாம். அன்றைய காலங்களில் ஏன் இன்றளவும் கூட தம்பதி அல்லது தனிமனிதர் உறங்க தனியாக பெட்ரூம் பெரும்பாலான இடங்களில் கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருசேரவே உறங்கியிருப்போம். அதிக நேரத்தில் ஒரே இடத்தில் உறங்குவதால், அவரின் ஒளி உடலின் தன்மை இருக்கும். காட்டு விலங்குகளுக்கு இதனை உணரும் சக்தி அதிகம். மனிதன் ஓரிடத்தில் இருந்து சிறுது தூரம் சென்றுவிட்ட பின்னரும், மனிதன் இவ்வழியாக சென்றுள்ளான் என்பதை காட்டுவிலங்குகள் அறிந்துகொள்ளும். நமது உடலின் வாசனை போன்றவற்றையும் வைத்து, உடலின் அதிர்வுகளை அறிந்துகொண்டு விலங்குகள் இதனை உணர்ந்துகொள்கிறது. நாம் படுக்கையை மடித்து வைக்காமல் இருந்தால், அதன் மீது ஏறியே அனைவரும் செல்வோம். அதிலேயே மீண்டும் சுத்தம் செய்யாமல் படுத்துகொண்டாள் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் கேடு ஏற்

பூஜை அறை டிப்ஸ்

Image
பூஜை அறையினை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதாவது பூஜை அறையில் காய்ந்த அல்லது அழுகிய புகளையோ அல்லது பழங்களையோ வைக்க கூடாது. அதேபோல் மஞ்சள், குங்குமம் மற்றும் விபூதியை பூஜை அறையில் மூட்டை மூட்டையாக வைக்க கூடாது. அதனை வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக எடுத்து வைக்க வேண்டும். * பூஜை அறை சாமி படங்கள் வைக்கும் திசை:- தெய்வங்களின் உருவ படங்களை பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி வைத்து வழிபட வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கலாம்.

இன்று வானில் மேற்கு திசையில் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும்

Image
வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். சென்னை,  வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம். இதுதொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:- “பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி பூமிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று (திங்கட்கிழமை) பூமிக்கு அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன. சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும்

மொய் வைக்கும் போது "ஒரு ரூபாய்"சேர்த்து வைப்பது ஏன்..?சொல்லுங்க பார்ப்போம்..!!

Image
நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன் எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்? ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தன. அதுவும் சும்மா இல்லை ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை!! (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பது. எனவேதான் இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம். இதை நீங்களும் தர்மம் வழுவாமல் செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும்வகையில் இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களினால் வழங்கப்பட்டு வந்தது. அதனால், மொய் ச

எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடாதிங்க! இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க!

Image
நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய நோய்களையும் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம்.அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் சென்று பணத்தை செலவழிக்காமல் ஒருசில இயற்கை வழி முறையை பயன்படுத்தி வீட்டிலேயே வரும் முன் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.    1. உடல் அசதி இருந்தால் முருங்கைக் கீரையை காம்புடன் சேர்த்து ரசம் வைத்து குடித்து வர அசதி குறையும். 2. தொண்டை வலி, தொண்டை அடைப்பு உள்ளவர்கள் பசும்பாலில் ஓமம் சேர்த்து காய்ச்சி காலையில் குடித்து வர தொண்டை வலி குணமடையும். 3. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இஞ்சி சாற்றை கொதிக்க வைத்து சம அளவு தேன் சேர்த்து இரவு உணவுக்குப் பின் குடித்துவர உடல் பருமன் குறையும். 4. வயிற்றுப்போக்கு போக இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அதில் உப்பு சேர்த்து குடிக்க வயிற்று பேதி நிற்கும். 5. உதடு சிவப்பு நிறமாக மாற ஆசைப்படும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புதினா இலை, கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து உதட்டில் பூசி வர உதடு சிவப்பாகும். 6. அல்சரால் வரும் வாய் புண் குணமாக கசகசாவை தூளாக்கி பசும்பால் கலந்து இரவு வேளையில் சாப்பிட்ட பின் இத

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

Image
அந்த காலத்தில் சித்தர்கள் அருளிய நோய்களுக்கு எல்லாம் மருந்து தான் இந்த பாடல். இந்தப்பாடல் காலத்தால் அழியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நோய்க்கு மருந்து தான் இதை யாராலும் மாற்ற முடியாது. இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.    நம் முன்னோர்கள் லேசு பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே பாடலை பாடியுள்ளனர். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இது இருந்தால் யாரும் மருத்துவரை நம்பி ஓட வேண்டியதில்லை. சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள்

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் தெரியுமா?

Image
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால் அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஏன் வடக்கு கூடாது? பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த திசையில் தூங்கலாம்? கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். குழந்தைகள் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையு