சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,423 ஆக உயர்வு
சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,423 ஆக உயர்வடைந்துள்ளது.
சிங்கப்பூர்,
உலக நாடுகளை ஒருசேர கொரோனா பாதிப்பு உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுமாறு அனைத்து நாடுகளும் கோரி வருகின்றன.
இதனால், கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,423 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “சிங்கப்பூரில் இன்று புதிதாக 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment