திருமணம் உண்டா இல்லையா ?








எனக்கு திருமணம் உண்டா இல்லையா ? பொதுவாக எல்லா இளைஞர், இளைஞிகளுக்குத் தோன்றும் கேள்வி. சிலர் தாமாகவே திருமணத்துக்கு, பெண்ணை / ஆணை தேர்ந்தெடுத்துப் பெற்றோர்களின் சம்மதத்திற்கு காத்திருந்தாலும் அவர்கள் மனதில் சிறு இழை ஓடுவது அம்மா, அப்பா ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ அப்புறம் தமது காதலர் வீட்டில் ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, இப்படிப் பல கேள்விகளை முன்னிறுத்தி, எனக்குத் திருமணம் உண்டா அல்லது இல்லையா என்கிற பாணியிலேயே இருக்கும்.


அதேபோல், காதலிக்காதவர்களும் எனக்கு அப்பா, அம்மா திருமணம் செய்வார்களா, இல்லையா எனவும் மனது ஏங்கித் தவிக்கத்தான் செய்யும். அப்படியே அவர்கள் இஷ்டப்படி செய்வித்தாலும், வருபவர் என்னை அன்பாகக் கவனிப்பவராக வருவாரா, அவர் சமூக அந்தஸ்து உள்ளவராக இருப்பாரா, அவரின் நிறம் மற்றும் அழகு எவ்வாறு இருக்கும். அவரின் கவர்ச்சித் தன்மை, ஈர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையுமா என்றெல்லாம் எண்ணத்தோன்றும்.


ஒருவருக்கு, அவர்தம் ஜனன கால ஜாதகத்தில், அவரின் லக்கினம், சுப கிரகங்களின் தொடர்பும், இலக்கினாதிபதி பலமாக இருந்தாலும், அவருக்கு திருமணம் நடக்கும்.  லக்கினாதிபதி, ஜாதகரைக் குறிக்கும். 2ஆம் இடம் குடும்பத்தைக் குறிக்கும். 7ஆம் இடம் திருமணம் செய்யும் நபரைக் குறிக்கும், அதாவது பெண் ஜாதகருக்கு வரப்போகும் கணவனைப்பற்றியும், ஆண் ஜாதகர் என்றால் அவருக்கு வர இருக்கும் மனைவியைக் குறிக்கும். இதில் நவாம்ச லக்கினத்திற்கு, சுபர் தொடர்பானால், திருமணம் நிச்சயம் நடக்கும். இதே போல் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், 2 மற்றும் 7ஆம் இடத்திற்கு (வீட்டிற்கு) சுபர்கள் தொடர்பு இருந்தால் திருமணம் நடக்கும். 


ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 1, 2, 7ஆம் இடங்கள், இம்மூன்றும் பாதிக்கப்பட்டால், திருமணம் நடக்காது. மேலும், பிறப்பு ஜாதகத்தில், 1 மற்றும் 7 ஆம் அதிபதிகள், நவாம்சத்தில் உள்ள இடத்தை காண வேண்டும். அவைகள், அந்த அதிபதிகள், முறையே 2, 6, 8, 12ஆம் இடங்களில் பிறப்பு ஜாதகத்திலும் மற்றும் நவாம்சத்தில் இருந்தால், திருமணத்தடையை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு இடத்தில் நன்றாக இருந்தால் திருமணம் நடக்கும். ஆனால், பிரச்னை உண்டு. சுக்கிரன் பாதிக்கப்பட்டால், திருமணத்தடை ஏற்படுத்தும். பிறப்பு ஜாதகம் மற்றும் நவாம்ச ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால், திருமணம் நடக்கும். 


இதைத் தவிர, திரிம்சாம்சத்தை D-30 பார்க்க வேண்டும். த்ரிம்சாம்ச லக்கினத்துடன் சுபர்கள் தொடர்பானால் திருமணம் உண்டு. சுபர், பிறப்பு லக்கினத்துடன் தொடர்பானால் நிச்சயம் இளமை (சரியான வயதில்) மணம் உண்டு. திரிம்சாம்சம் பாதிக்கப்பட்டால், திருமணம் தடைப்படும். இதுபோல், ஒருவருக்கு, தாமத திருமணமா, பல மணம் ஏற்படும் அமைப்பை உடையவரா, அன்பாக கவனிக்கும் கணவர் / மனைவி அமைவாரா, நல்ல நிறம் மற்றும் அழகான துணைவர் கிடைக்குமா, திருமணத்திற்குப் பிறகு நல்வாழ்க்கை அமையுமா என்பனவற்றை ஜோதிடம் மூலம் அறிய முடியும். இவை அத்தனையும், நமது மானிட சமுதாயத்திற்கு நமது மூதாதையர் மற்றும் ரிஷிகளால் கூறப்பட்டவை எனும் போது ஆச்சரியம் கலந்த உண்மையாக உள்ளது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்