Posts

Showing posts from October, 2019

தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு...! மற்றும் மருத்துவம்!

Image
டெங்கு காய்ச்சல்: ஏடிஎஸ் வகை கொசு கடித்தால் மனிதர்களுக்கு இந்த தொற்று நோய் பரவுகிறது. இதை 'எலும்பு முறிவு காய்ச்சல்' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் வந்தால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த நோய் மிகவும் தீவிரம் ஆகும் பட்சத்தில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் 'டெங்கு குருதிப் போக்கு காய்ச்சல்' ஏற்படும். இது உயிருக்கு ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். ஒருவருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயை பரப்பும் கொசுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். ஆனால் டெங்கு காய்ச்சல் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு இருக்கும்பொழுது உடலில் நீர் சத்து மிகவும் குறைந்து காணப்படும். இந்த நீரின் அளவை சரிசெய்வதற்கு கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் வழங்கும் ஓஆர்எஸ் என்ற நீராகாரம் போதுமான அளவு கொடுத்து வர வேண்டும். இதனால் உடலில்