Posts

Showing posts from 2019

சில ஆன்மீக தகவல்கள் ...

Image
1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் .. 2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,ஏவல் ,சூன்யும் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது .. 3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் , மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் ...இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள் . 4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .(சில எண்ணிக்கை மட்டும் ). 5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும் , (பதப்பட்ட பால் வேண்டாம் ),அல்லது இளநீரை தரவேண்டும் , இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது .. 6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு )

கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள்.

Image
சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும். பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் க

பசுவைப் பார்த்தால் சுப சகுனம் ............

Image
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம் (கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே "பஞ்சகவ்ய அபிஷேகம்' எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா .......

Image
தேகம், மனம், சாஸ்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும். எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.... நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும். 'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும். நாம் பக்தி பண்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

Image
* காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இருந்தால் போதும். * முடிந்தளவு பிறருக்கு உதவி செய்யுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். அன்றாடம் துாங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு கிடைக்கும். * தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி விடும். * ஒரு தொண்டனைப் போல ஆன்மிகத்தில் ஈடுபடுபவன் சேவை தவிர மற்றதை சிந்திக்க மாட்டான். * பக்தி என்னும் பண்பு இல்லாவிட்டால் மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போவான். * தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பவன் எல்லா மேன்மையும் அடைவான். * படிப்பு, பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது. * ஓடும் நதி இறுதியில் கடலைச் சேரும். மண்ணில் பிறந்த உயிர்கள் கடவுளைச் சென்றடையும். * உண்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நாக்கை கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாக அடங்கி விடும். * கர்வத்தால் சொல்லும், செயலும் முரண்படும். அடக்கத்தால் சொல்லும், ச

முருகனுக்கு எதனால் இத்தனை பெயர்கள் ?

Image
முருகனுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று கேள்விகள் உங்களுக்கு தோன்றலாம். முருகன் : முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கின்றது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள். சரவணபவன் : சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன்

இந்துக் கடவுள்களை எப்படி வழிபடுவது ?

Image
1.பிள்ளையாரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. 2.பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாதது ஆகும். தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். 3.விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது. 4.சரஸ்வதியை பவளமல்லியால் அர்ச்சனை செய்யக்கூடாது. 5.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசியால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம். 6.மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யக் கூடாது. 7.வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகித்தல் கூடாது. 8. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துதல் வேண்டும். 9.ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம். 10.தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதிகள் இல்லை. 11.வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தக

பலவிதமான கேள்விகளுக்கு விடைகளை தரும் மௌன விரதம்

Image
விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதம் ஆகும். உண்ணாவிரதம், உடலை பட்டினி போட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மௌன விரதம், மனதை பட்டினி போட்டு, மன எண்ணங்களை மேம்படுத்துவதே மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும்.  ஆழ்நிலையில் மௌனமாக இருப்பதே, மௌன விரதம்!. பேசிப் பயனிலா சூழலில், மௌனமாக இருப்பது, சிறந்த தீர்வாகும். மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர். திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர்.

ஸ்ரீராமஜெயம் எழுதுவதின் சிறப்புகள்...

Image
"ராம" என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா" என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப்  போக்கடிப்பது என்று பொருள். ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக  இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராமமந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.