Posts

Showing posts from December, 2018

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்

Image
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: 1.இயற்கையாக கிடைக்கும் இனிப்புச் சுவைக் கொண்ட இனிப்புகளை நாம் உண்ணாதது மற்றும் நமது உணவுகளில் அவற்றை சேர்த்து பயன்படுத்தாதது. 2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது. 3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 4.தவறான உணவுகளை ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தினமும் நாம் உட்கொள்வது. 5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது. 6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது. 7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது. மேற்கண்ட தவறான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் நாம் சர்க்கரை நோயை வரவழைத்துக் கொள்கின்றோம்

பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
நம் அன்றாட வாழ்வில் தினமும் காலையில் பால் அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. அதே போல துளசி செரிமான பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் காய்ச்சலை வேகமாக குணமாக்க முடியும். மேலும் இந்த கலவை இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதமான சூடுள்ள பாலில் துளசி சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். இவை இரண்டும் சேர்ந்த கலவை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் புற்று நோய் செல்கல் உருவாகமல் தடுக்கிறது. தலைவலிக்கு என்ன தான் மருந்து எடுத்தும் பயனில்லையா? பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் தலைவலி குறைவதை கண் கூடாக

இந்த உணவுகளை நீங்கள் கழுவிய பின்னர்தான் உண்ணவேண்டும் !!

Image
தர்பூசணியில் உள்ள உட்பகுதியை தான் நாம் சாப்பிடுவோம் என்றாலும், அதன் மேல் பகுதியில் இருந்து தான் நாம் கட் செய்வோம். எனவே, அதில் இருக்கும் சால்மோனெல்லா மற்றும் லிஸ்டேரியா போன்ற நோய் கிருமிகள் உள்ளே இருக்கும் பழத்திலும் வந்து ஒட்டி கொள்ளும். காளானில் ஏராளமான வகைகள் உள்ளன. நாம் சாப்பிட கூடிய காளானை நீரில் ஊற வைத்து கழுவிய பின்னரே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இதில் உள்ள தூசுகள் மற்றும் நுண் கிருமிகள் நமது உடலில் சென்று நோய்களை உருவாக்கும். சிப்பியை பலரும் சாப்பிடுவதற்கு பயன்படுத்துவர். ஆனால், இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக நன்றாக கழுவிய பின்னர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், கடலில் உள்ள கழிவுகள், பாக்டீரியாக்கள் இதனை மீது ஒட்டி கொண்டிருக்கும்.காய்கனிகள் என்றாலும் அவற்றை அப்படியே சாப்பிடுவது தவறு. முற்றிலுமாக கழுவிய பின்னரே அதனை சாப்பிட வேண்டும். 

வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

Image
திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும். ஓம் வாஜுஸூதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம்  ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்  கருடத்வஜம் வராஹம் புண்டரீகாக்ஷம்  ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த  மஜமவ்யயம் நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம் வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம் த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம் ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம் தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸ¨தனம் வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸூதேவஜம் ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் ஸகலம் நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம் ஹிரண்யதனுஸங்காஸம் ஸூர்யாயுத ஸமப்ரபம்மேகஸ்யாமம் சதுர்பாஹம் குஸலம்

காலண்டர் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் இப்பதிவில் காணலாம்

Image
காலண்டர் என்று நம் நினைவுகளில் வந்து செல்வது என்னவென்றால், அதில் பெரியவர்களாயிருப்பின் முக்கியமான நாட்கள் மற்றும் விழா வைபோகம் பற்றி நினைவுக்கு வரும். அதுவே, சிறியவர்களாயிருப்பின் விடுமுறை எப்பொது கிடைக்கும் என்று நினைப்போம். காலண்டர் என்றவுடனே, முக்கியமான விழாக்கள், விடுமுறை தினங்கள் மற்றும் நாட்டின் சில சிறப்பான விசயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள ஒரு அற்புதமான சாதனம். அதுமட்டுமல்லாமல், எந்த தினத்தில் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிற சாதனம். அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இதில் காண்போம். வாருங்கள். காலண்டர் காலண்டர் இந்த பெயர் எதிலிருந்து வந்தது தெரியுமா?  கலேண்டே(மாதத்தின் முதல் நாள் அல்லது கணக்கு கூட்டுவது)  என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. நாம் பயன்படுத்தும் இந்த காலண்டர் எந்த வகையை சார்ந்தது தெரியுமா? இது கிரிகோரியன் காலண்டர். இதை அறிமுகப்படுத்தியது, அப்போதைய கத்தோலிக் தேவ ஆலயத்தில் உள்ள  போப் கிரிகோரி 13 என்பவர் 1582  ல் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பு ஜூலியன் காலண்டரை பயன்படுத்தி வந்தனர். முதன் முதலில்  எகிப்தியர்கள்  தான் காலண்டரை பிரபலபடுத்தினார். இதை